ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு! - சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபரை தோளில் தூக்கிச் சென்று உதவிய பெண் காவல் ஆய்வாளரை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி
பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி
author img

By

Published : Nov 13, 2021, 9:57 AM IST

சென்னை: நவ. 12 ஆம் தேதி, டிபி சத்திரம் காவல் ஆய்வாளரான ராஜேஸ்வரி, ஷெனாய் நகர் கல்லறை சாலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வந்த போது அங்கு, சுயநினைவின்றி கிடந்த 24 வயதான உதயகுமார் என்பவரை மீட்டு, தன் தோள் மீது சுமந்து கொண்டு ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதி - பாராட்டு

பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியின் இந்த மனிதநேயமிக்க செயலைப் பாராட்டும் விதமாக, ராஜேஸ்வரியை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை அழைத்துப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

in article image
பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு

மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அந்த பாராட்டு பத்திரத்தில், 'என்பும் உரியர் பிறர்க்கு' என்று அவர் ஆற்றிய அரும் பணிக்கு பாராட்டு தெரிவிப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாதிக்கப்பட்ட பார்வதியம்மாவுக்கு உதவுங்கள் - சூர்யாவுக்கு சிபிஎம் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details