தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாதம் ஒருமுறை மண்டலத்துக்கு ஒரு "வரும் முன் காப்போம் திட்ட" சிறப்பு முகாம் - மேயர் பிரியா

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலத்தில் மாதம் ஒருமுறை மண்டலத்துக்கு ஒரு "வரும் முன் காப்போம் திட்ட" சிறப்பு முகாம் நடைபெறும் என மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேட்டி
mayor priya says Once a month kalaignarin varumun kappom thittam Special Camp will happen for every Zone in chennai

By

Published : Mar 11, 2022, 12:07 PM IST

Updated : Jun 27, 2022, 1:05 PM IST

சென்னைதரமணியில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட முகாமை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் தொடக்கி வைத்தனர். பின்னர் ஆய்வகம், மனநல ஆலோசனை, எலும்பு மற்றும் இயன்முறை பரிசோதனை, கண் பரிசோதனை முதலியவற்றை ஆய்வு செய்தனர்.

செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியா

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, "வருமுன் காப்போம் திட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே தொடங்கி வைத்தார். மூன்றாவது முறையாக தற்போது தரமணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு பல்வேறு விதமான பரிசோதனைகளும் மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. மக்கள் முன்வந்து இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வருமுன் காப்போம் திட்டத்தின் முகாமை மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

மேலும், சென்னையில் உள்ள 15 மண்டலத்தில் மாதம் ஒருமுறை மண்டலத்துக்கு ஒரு வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேயராக பதவி ஏற்று ஒரு வார காலம் தான் நிறைவடைந்துள்ளது வருங்காலங்களில் பல திட்டங்கள் கொண்டு வரப்படும் " என தெரிவித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் பிரியா

இதையும் படிங்க: சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளில் மேலிடத்திலிருந்து ஆணை வர எதிர்பார்த்து காத்திருக்கவும் கூடாது - ஸ்டாலின்

Last Updated : Jun 27, 2022, 1:05 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details