சென்னை: தமிழ் தேசியம் சார்ந்து செயல்படும் சிலரது எண்களும் பெரியாரிய அமைப்பைச் சேர்ந்த சிலரது எண்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கு. ராமகிருஷ்ணன், திராவிடர் கழகம் குமரேசன், நான் உள்பட அனைவரது செல்போன்களும் வேவு பார்க்கும் பட்டியலில் உள்ளது என மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்துத்துவம், பாஜகவை எதிர்ப்பவர்களின் செல்போன் வேவு பார்க்கப்பட்டுள்ளன. பெகாசஸ் வைத்துதான் பீமா கொரேகான் வன்முறை தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். பெகாசஸ் தொடர்பாக நீதி விசாரணை வேண்டும்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். இதுவே மற்ற நாடுகளில் இது போல் நடைபெற்றால் உடனடியாக பதவி விலகி இருப்பார்கள்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின்பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவாரா?
பெகாசஸ் விவகாரம் தொடர்பான புகார்களை விசாரிக்க சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜக அரசை எதிர்க்கும் திராவிட சித்தாந்தம் உடைய திமுக தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றி நடத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு எதிர்ப்பும் திமுக தரப்பில் இல்லை. தற்போது இந்த பெகாசஸ் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விசாரணை நடத்த ஆணையத்தை அமைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக் 6ஆவது நாள்: இந்தியா பங்கேற்கும் போட்டி அட்டவணை