தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக ஆட்சியில் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர் - வைகோ குற்றச்சாட்டு - May 1

சென்னை: கடந்த ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில், தொழிலாளர்கள் பல வகைகளில் நசுக்கப்பட்டு வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

வைகோ

By

Published : Apr 30, 2019, 6:17 PM IST

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்செயளாலர் வைகோ வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதில், "இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில், தொழிலாளர்கள் பல வகைகளில் நசுக்கப்பட்டு வருகின்றனர். தொழிலாளர்கள் நலனுக்காக அம்பேத்கரின் முன் முயற்சியால் கொண்டுவரப்பட்ட 44 தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை 4 சட்டங்களாக குறைத்து, நாடாளுமன்றத்தில் சட்ட முன்வரைவை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது.

தொழிலாளர் உரிமைக்குப் போராடினால் மிரட்டி ஒடுக்கும் எதேச்சதிகாரப் போக்கு தலைவிரித்து ஆடுகின்றது. நிரந்தர தன்மை கொண்ட பணிகள் அனைத்தும் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தொழில் பழகுநர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் கொடுமை நடக்கிறது.

குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லாமல், பணி பாதுகாப்பு இல்லாமல் கோடிக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. குறைந்தபட்ச ஊதியம், சமவேலைக்கு சம ஊதியம் போன்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்க மோடி அரசு தயாராக இல்லை. தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் காலவரையின்றி பணிபுரியக் கட்டாயப்படுத்தப்பட்டு வருவது மட்டுமின்றி, அவர்களின் பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாக ஆகியுள்ளது.

தொழிலாளர் நலன் காக்கும் அரசு பொறுப்பு ஏற்றால்தான், அவர்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க முடியும். அதற்கான சூளுரையை மே நாளில் ஏற்போம்!தொழிலாளர்களுக்கு மே நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details