தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு: பெற்றோர் ஆலோசனை தெரிவிக்கலாம்...! - Matriculation board director karupasamy

சென்னை: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு மாணவர் சேர்க்கை குறித்த புகார்களை பெற்றோர் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் தலைமையிலான குழுவிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை  ஒதுக்கீடு: பெற்றோர்கள் ஆலோசனை  தெரிவிக்க அறிவிப்பு...!
தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு: பெற்றோர்கள் ஆலோசனை தெரிவிக்க அறிவிப்பு...!

By

Published : Sep 15, 2020, 9:05 PM IST

இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் நுழைவு வகுப்பில் சேர்க்கை நடைபெறுகிறது.

பள்ளியில் உள்ள முறை வகுப்புகளில் மாணவர்களை இத்திட்டத்தின் மூலம் சேர்க்கலாம். மேலும் rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் குறித்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருப்பின் அதற்கான காரணங்களும் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையில் செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

இலவச கட்டாய கல்வி சட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்கு அந்தப் பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியில் அக்டோபர் ஒன்றாம் தேதி குழுக்கள் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் அக்டோபர் 3ஆம் தேதி இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை அக்டோபர் 7ஆம் தேதி சம்பந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும்.

தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு: பெற்றோர்கள் ஆலோசனை தெரிவிக்க அறிவிப்பு...!

இது குறித்து பெற்றோர் ஏதேனும் புகார் அல்லது ஆலோசனைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் செயல்படும் குழுவிடம் அளிக்கலாம். அதேபோல் மாநில அளவில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் தலைமையில் செயல்படும் குழுவிடம் தெரிவிக்கலாம். மேலும், சேர்க்கைக்கு இணைக்கப்பட்ட இடங்களில் காலியாக இருந்தால் டிசம்பர் 15 வரை காலியாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். அதை நிரப்புவது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க...நீட் தேர்வு மரணத்திற்கு திமுக தான் காரணம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details