சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பேறுகால பணப்பயன்களை அளிப்பதற்காக டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தில் பதிவு செய்திருந்த 350க்கும் மேற்பட்டோருக்கு நிதி முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இத்திட்டத்தின்படி 12 ஆயிரம் ரூபாயை தலா 4 ஆயிரம் என மூன்று தவணைகளாக வழங்கும் திட்டத்தின்கீழ், முறையாக நிதி வழங்காத கிராம சுகாதார மைய செவிலியர் ஆர்.சுமதி மீது பள்ளிக்கரணை பகுதியைs சேர்ந்த அமலா உள்ளிட்டோர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தமிழ்நாடு அரசிடமும், சுகாதாரத்துறை இயக்குனரிடமும் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவும், வழங்கப்படாத பேறுகால நிதியை வழங்கவும் உத்தரவிடக்கோரி அமலா, ரேகா, சேர்மக்கnனி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழ்நாடு அரசும், செவிலியர் சுமதியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
செவிலியர் மீதான வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு! - டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்
சென்னை: மகப்பேறு கால நிதி உதவியை பயனாளிகளுக்கு முறையாக வழங்காத செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சசிகலாவின் வருமானவரி வழக்கு முடித்து வைப்பு!