தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. இதில் வாக்களிக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நிறைவு - இடைத்தேர்தல்
சென்னை: தேர்தலை ஒட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா என்பதை கண்டறிய வேட்பாளர்கள் அல்லது அவருடைய பிரதிநிதிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்து மாதிரி வாக்குகளை செலுத்தினார்கள். இயந்திரம் சரியாக இயங்குகிறதா என்பதையும் விவி பேட் இயந்திரத்தில் தான் அழுத்திய சின்னம் சரியாக இருக்கிறதா என்பதையும் பார்த்துக் கொண்டனர். சுமார் ஒரு வாக்குச் சாவடி மையத்தில் 50 மாதிரி வாக்குப்பதிவுகள் செலுத்தப்படுகிறது.
மேலும், இவை அனைத்தும் சரியாக உள்ளது என்று அதிகாரிகளிடம் கூறிய பின்பு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து அனைவரும் வெளியேறினர். அதன்பிறகு தேர்தல் அலுவலர்கள் இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை மாதிரி வாக்குகள் அனைத்தும் அழித்த பிறகு மீண்டும் வாக்குப்பதிவு எந்திரத்தை சீல் வைத்து வாக்குப் பதிவுக்கு தயாராக வைத்துள்ளனர். இதேபோன்று நாகப்பட்டினத்திலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.