போலியோவை ஒழிப்பதற்காக 1994-ம் ஆண்டு முதல் ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய மாதங்களில் இரு தவணையாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகின்றது. போலியோவை முற்றிலும் ஒழிக்கவே இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது. போலியோவை ஒழிக்க வேண்டும் என்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் 10-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்! - போலியோ சொட்டு மருந்து
சென்னை: தமிழகம் முழுவதும் மார்ச் 10-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
போலியோ
இந்நிலையில், இந்தாண்டிற்கான சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று அறிவித்த நிலையில், சில காரணங்களால் அது ஒத்தி வைக்கப்பட்டது. முதலில் பிப்ரவரி 10-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது மார்ச் 10-ம் தேதி நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இத்தேதியில் அனைத்து மாவட்டங்களிலும் சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.