நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் முற்றிலும் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை - வாகன ஓட்டிகள் அவதி - nivaar cyclone
சென்னை: கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியிருப்பதால், வாகன ஒட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
சென்னையில் கனமழை
கே.கே. நகர் பி.டி. ராஜன் சாலையில் இரண்டு அடிக்கு மேலாக மழை நீர் தேங்கி நிற்பதன் காரணமாக வாகனங்களை இயக்கமுடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். அதேபோல், வடபழனி, முடிச்சூர், லஷ்மி நகர், வரதராஜபுரம், பொழிச்சலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது.
இதையும் படிங்க:நெருங்கும் ’நிவர்’ புயல் - தற்போதைய நிலை என்ன?
Last Updated : Nov 24, 2020, 1:25 PM IST