தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Tamil Nadu Cabinet: டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்பு... தொழில்துறை ஒதுக்கீடு!

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப்பிரமாணம் செய்து வைத்தார்.

Tamil Nadu Governor RN Ravi administers oath of office to Mannargudi MLA TRB Rajaa as Minister
புதிய அமைச்சராக பொறுப்பேற்றார் மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா

By

Published : May 11, 2023, 11:19 AM IST

சென்னை: கிண்டி, ராஜ் பவன், தர்பார் ஹாலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில், புதிய அமைச்சராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவிற்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்துவைத்தார்.

யார் இந்த டி.ஆர்.பி.ராஜா? திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவின் மகனான டி.ஆர்.பி.ராஜா, கடந்த 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் மன்னார்குடி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர்.

தமிழ்நாடு அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சர்கள் யாரும் நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில், டிஆர்பி ராஜாவின் அமைச்சர் பதவி மூலம் இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.பி.ராஜாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: யானை பாகன்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியில் பாரபட்சம்? - அதிகாரிகள் விளக்கம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details