தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க கூவம் ஆற்றில் குதித்த நபர் உயிரிழப்பு - person died

ஆவடியில் சீட்டுக்கட்டு விளையாடி, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க கூவம் ஆற்றில் குதித்த நபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

avadi
avadi

By

Published : Nov 5, 2021, 7:26 PM IST

சென்னை:ஆவடி சோரஞ்சேரி பஜனைகோயில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (46). கூவம் ஆற்றுப்பகுதியில் நண்பர்களுடன் சீட்டுக்கட்டு விளையாடி, சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அவ்வழியாக காவல் துறையினர் வருவதை அறிந்து, அவர்களிடமிருந்து தப்பிக்க சரவணன் கூவம் ஆற்றில் குதித்துள்ளார்.

ஆழமான பகுதியில் சிக்கியதால், நீரில் மூழ்கி பரிதாபமாக சரவணன் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் இரண்டு மணி நேரமாக சரவணனின் உடலைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை - ரூ.431 கோடிக்கு மது விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details