சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன. இந்த வாகனங்களில் பல அடிக்கடி திருடு போவதாக மருத்துவமனை போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனால் போலீசார் தனிப்படை அமைத்து பைக் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், கண்ணகி சிலை அருகே பண்ரூட்டியை சேர்ந்த கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி வந்த கணேஷ் சென்னை மெரினா கடற்கரையிலேயே தங்கி கிடைக்கும் வேலைக்குச் சென்று வந்தார். நாளடைவில் கஞ்சா போதைக்கு அடிமையானார். அதற்காக பிக் பாக்கெட், செல்போன் பறிப்பு, திருட்டு செயல்களில் ஈடுபட தொடங்கினார்.
இதனிடையே ரயில்வேயில் இரும்பு கம்பிகளை திருடிய வழக்கில் கைதானார். ஒன்றரை வருடம் சிறையில் இருந்தார். இதையடுத்து வெளியே வந்த அவர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்துவந்தார். அந்த வகையிலேயே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் மூன்று இருசக்கர வாகனங்களை திருடினார்.