சென்னை ராயப்பேட்டை வி.எம். தெரு சந்திப்பு வழியாக கடந்த 12ஆம் தேதி 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்றபோது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட அருகிலிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு ஆட்டோ மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவருக்கு கரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. பின்னர் இந்தச் செய்தியை அறிந்த உறவினர்கள் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.
இவர்களிடம் விசாரித்தபோது இறந்த நபர் அதே ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மயக்கமடைந்தபோது ஆட்டோ மூலம் அழைத்து வந்த நபர்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காசிக்கு ஆதரவாக வாதாட மாட்டோம் - நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு