சென்னை:அயனாவரம் தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் 37 வயதான இவர் பழைய இரும்பு பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் பிரேம்குமார் நியூ ஆவடி சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் ஒன்று மோதி தூக்கி வீசப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து காரில் இருந்து தப்பி ஓடிய ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் விபத்து ஏற்படுத்திய காரை ஹரி கிருஷ்ணன் என்பவர் 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியதும் இவர் பிரேம்குமார் வீட்டின் அருகில் வசிக்கக்கூடிய நபர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது செல்போன் எண்களை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அரிகிருஷ்ணன், பிரேம்குமாரின் மனைவி சங்கு பிரியா ஆகிய இருவரும் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பில் இருந்ததை கண்டுபிடித்தனர்.
அதன் அடிப்படையில் ஹரி கிருஷ்ணன் மற்றும் பிரேம்குமார் மனைவி சங்கு பிரியா இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திட்டமிட்டு, ஆட்கள் வைத்து காரை ஓட்டிச் சென்று பிரேம்குமாரை மோதி கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். பின்னர் சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு இது கொலை என்பதையும் உறுதி செய்துள்ளனர்.
இதையடுத்து ஹரிகிருஷ்ணன் என்பவரையும் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட பிரேம்குமாரின் மனைவி சங்கு பிரியா என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரை இயக்கி கொலை செய்த சரத்குமார் என்பவரையும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கை அயனாவரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு கொலை வழக்காக பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இதையும் படிங்க:2 சப் இன்ஸ்பெக்டர்களின் சஸ்பெண்ட் உத்தரவை நீக்க வேண்டும் - காவல்துறைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!