Robbery: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (35) வீட்டருகே காய்கறி கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 30) மஞ்சுளா தனது நகைகளை புதிய ராணுவ சாலையில் உள்ள ரெப்கோ வங்கியில் அடைமானம் வைத்து நான்கு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பின்னர், அவர் அந்தப் பணத்தை இருசக்கர வாகன சீட்டுக்கடியில் வைத்துள்ளார். அதன் பிறகு, அவர் ஆவடி சந்தைக்கு வந்து காய்கறி வாங்கியுள்ளார்.
பின்னர் வீட்டுக்குச் சென்ற பிறகு நான்கு லட்சம் ரூபாய் கொள்ளைபோனது தெரியவந்தது. காய்கறிக் கடைக்குச் சென்று காய்கறி வாங்கும்போது அடையாளம் தெரியாத நபர்கள் மஞ்சுளாவின் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து ஆவடி காவல் நிலையத்தில் மஞ்சுளா புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற நபர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:சிறுவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு - உறவினர்கள் சாலை மறியல்!