சென்னை: தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், செல்வ விநாயகர் கோயில் தெருவில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டடுக்கு கட்டடம் கட்டும் பணியானது நடந்து வருகிறது. அப்போது, ஜல்லி கலந்து விடும் இரும்பு பைப்பை கீழிருந்து கட்டடத்தின் மேலே ஏற்றும்போது எதிர்பாராத விதமாக அதில் மின்சாரம் பாய்ந்தது.
இதில், மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி மோனிரோல் (20) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ராஹிதுல் (22), ஹமீதுல் (29), ஆகியோர் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தனர். இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.