சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று (ஜூன். 25) நண்பகல் மூன்று மணியளவில் மேம்பாலத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்தார்.
கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை! - கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை!
சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திலிருந்து ஒருவர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு மேம்பாலத்திலிருந்து குதித்து ஒருவர் தற்கொலை!
இதனைக் கண்ட அக்கம்பக்கதினர் விழுந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் நேற்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார்.
தகவலறிந்த காவல் துறையினர், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர் பாலத்தின் மீது இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.விசாரணையில், இறந்தவர் செந்தில் (45) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Jun 26, 2021, 1:02 PM IST