சென்னை விமான நிலையத்தில் திருச்சியைச் சேர்ந்த தா்பாா் லத்தீப் (60) என்பவர் சுறா மீன்களின் வால்கள், செதில்கள் ஆகியவற்றை சிங்கப்பூருக்குச் செல்லும் ஏா் இந்தியா விமானத்தில் கடத்த முயன்றபோது சுங்கத்துறை அலுவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடமிருந்து, ரூ. 8 லட்சம் மதிப்புடைய 14 கிலோ சுறா மீன்களின் செதில்கள், வால்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விமானத்தில் சுறா மீன்களின் வால், செதில் கடத்தியவர் கைது!
சென்னை: சிங்கப்பூர் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சுறா மீன்களின் வால், செதில்கள் ஆகியவற்றை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூரா மீன்களின் வால், செதில்
இவற்றைக் கொண்டு ஸ்டாா் ஓட்டல்களில் தயாரிக்கும் சூப், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதால் சீனாவில் மிகவும் பிரபலமானது. ஆனால், நமது நாட்டில் அழிந்துவரும் இனம் என்பதால், மத்திய அரசு இதை வெளிநாடுகளுக்குக் கடத்த தடை விதித்துள்ளது. தற்போது, மத்திய வனக்குற்றப்பிரிவு அலுவலர்களுடன் சுங்கத்துறை அலுவலர்கள் இணைந்து, கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விமானத்தில் ஹெராயின் கடத்தி வந்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை