சென்னை அயனாவரம் வி.பி. காலனி விரிவாக்கம் சந்திப்பில் அரசு நியாய விலைக்கடை உள்ளது. இந்தக் கடையிலிருந்து டாட்டா ஏஸ் வாகனத்தில் இரண்டு பேர் ரேசன் அரசி மூட்டைகளை வைத்துக்கொண்டிருந்தனர். அப்போது இரவு பணி முடித்துச் சென்ற காவலர் கருப்பசாமி சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்தார்.
உடனே வாகனத்தின் ஓட்டுநர் கணேசன் என்பவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து மற்றொரு நபரான வண்டியின் உரிமையாளர் அமித்தை காவலர் கருப்பசாமி கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் வாகன உரிமையாளர் அமித்திடம் விசாரணை செய்ததில், அரிசி மூட்டைகளை செனாய் நகர் பகுதியில் உள்ள மாடு உரிமையாளர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்ய எடுத்து செல்ல இருந்ததாகத் தெரிவித்தார்.