சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த 13 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காணாமல் போன சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த உமாபதி என்ற 20 வயது வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் காணாமல் போன சிறுமியிடம் நட்பாக பழகி, அவரிடம் ஆசை வார்த்தை கூறி இல்லத்திற்கு அழைத்து வந்து, அச்சிறுமியிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.