சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, இன்று மாலை தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக மிரட்டல் விடுத்து அழைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுடன் அபிராமபுரம் காவல் நிலைய காவலர்கள், உடனடியாக முதலமைச்சர் வீட்டிற்குச் சென்று சோதனை செய்தனர். அந்தச் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலி என கண்டுபிடிக்கப்பட்டது.