சென்னை, மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகை ஸ்ரீப்பிரியாவை ஆதரித்து கமல்ஹாசன் மயிலாப்பூர் தொகுதிகுட்பட்ட நொச்சிக்குப்பம் பகுதியில் நேற்று (மார்ச்.25) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், ”மயிலாப்பூரில் போட்டியிடாமல் ஏன் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். பாஜக ஒரு இடத்தில்கூட வென்று விடக்கூடாது என்பதற்காகதான் நான் அங்கு போட்டியிடுகிறேன். 50 ஆண்டுகாலம் தமிழையும், அரசியலையும் சொல்லிக்கொடுத்தவர்களுக்கு இப்போது இந்திக்காரர் ஒருவர் அரசியல் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கிறார்.