சென்னை: இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடுமையான முயற்சிகளுக்கு பின் 2004 ஆம் ஆண்டு செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி. பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் இறுதி வெற்றியை ஈட்டித் தந்தவர் கருணாநிதி.
பெரிதாக ஒன்றும் இல்லை
செம்மொழி அறிவிப்பு வந்து 17 ஆண்டுகளாகிவிட்டன. மொழி வளர்ச்சிக்கு என நாம் என்னவெல்லாம் செய்திருக்கிறோம் என கறாராக தொகுத்து பார்த்தால், பெரிதாக ஒன்றும் இல்லை.
ஆபத்தில் பிறமொழிகள்
பலமொழிகளில் நடித்த பிறகுதான் 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்பதை முழுதாக உணர்ந்தேன். ஆங்கிலத்தைத் தவிர பிறமொழிகள் ஆபத்தில் உள்ளன.