தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டிற்கும் தெலங்கானாவிற்கும் ஆரோக்கியமான பாலம் பாசத்தால் அமைக்கப்படும்'- தமிழிசை - tamilnadu telangana emotional bridge

சென்னை: தமிழ்நாட்டிற்கும் தெலங்கானாவிற்கும் ஆரோக்கியமான பாலம், பாசத்தால் அமைக்கப்படும் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan

By

Published : Oct 8, 2019, 9:38 AM IST

Updated : Oct 8, 2019, 9:56 AM IST

அந்த வாழ்த்தில் அவர், ”மக்கள் அனைவருக்கும் சரஸ்வதி தினம் மற்றும் விஜயதசமி வாழ்த்துகள். இந்த வெற்றித்திருநாள் தமிழ்நாட்டிற்கு எல்லா நன்மைகளையும் பெற்றுத்தரவேண்டும். தமிழ்நாட்டில் எல்லாம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

தெலங்கானாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் ஆரோக்கியமான பாலம் பாசத்தோடு அமைக்கப்படும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பிளாஸ்டிக் இல்லாத தெலங்கானா ராஜ்பவனை படைத்திருக்கிறோம். தெலங்கானாவில் நான் பதவியேற்றவுடன் ராஜ்பவனில் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்துவதில்லை. மேலும், பிரதமரின் ’ஃபிட் இந்தியா’ திட்டத்தின் கீழ் ராஜ்பவனில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் காலை 5.30 மணிக்கு யோகா பயிற்சி வழங்கப்படுகிறது.

தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு

அதில் நான் உட்பட ராஜ்பவனில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்கிறோம். மகிழ்ச்சியான சூழல், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் ஆகியவை அமைந்த ஆயுத பூஜையன்று தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் " என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:அசுரன் பல நாவல்களைப் படமாக்கும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது-காவல் துணை ஆணையர் பெருமிதம்!

Last Updated : Oct 8, 2019, 9:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details