மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், மத்திய சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடிகர் நாசர் மனைவி கமிலா நாசர் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின்போது நாசர் உடன் இருந்தார்.
'மைத்துனரின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது..!' - கமிலா நாசர் விளக்கம் - மைத்துனர்
சென்னை: 'மைத்துனரின் கருத்தில் அரசியல் உள்நோக்கம் உள்ளது' என்று, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் நடிகர் நாசரின் மனைவி கமிலா நாசர் விளக்கமளித்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமிலா நாசர், "மத்திய சென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். சாலை நெரிசல், தண்ணீர் பிரச்னை போன்றவற்றை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது" என்று தெரிவித்தார்.
மேலும், நாசர் சகோதரர் உங்களை விமர்சித்து வெளியிட்டுள்ள வீடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு தனது மைத்துனர் பேசியது தனிப்பட்ட கருத்தில், அரசியல் உள்நோக்கம் உள்ளது என கமிலா நாசர் பதிலளித்தார்.