தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி- சீன அதிபர் ஜின்பிங் வருகையால் காஸ்ட்லியான மாமல்லபுரம்! - இனி வெண்ணை உருண்டை பறவை பார்க்க கட்டணம்

சென்னை:மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டையைப் பார்வையிடவும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

butterball rock

By

Published : Oct 19, 2019, 8:36 PM IST

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று மாமல்லபுரம். இங்கு பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை பறைசாற்றும் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த கலைச் சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது.

குறிப்பாக வெண்ணை உருண்டை பாறையை மக்கள் ஆர்வமுடன் கண்டு செல்வர். இந்த பாறையை தாங்கி பிடித்தவாறு புகைப்படம் எடுக்கப் பலரும் விரும்பி இங்கு வருகை புரிகின்றனர்.

மோடி, சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரம் சந்திப்பு

கடந்த 11, 12ஆம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிகழ்வு மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இவர்களின் சந்திப்பிற்காக மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறை பகுதியில் புல் தரைகள், வண்ண விளக்குகள் என பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. மேலும், இவர்களின் சந்திப்பிற்கு பிறகு மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

வெண்ணை உருண்டை பாறை

இந்நிலையில் மாமல்லபுரத்தில் புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதுவரை வெண்ணை உருண்டை பாறையை இலவசமாக மக்கள் பார்த்து வந்த நிலையில் தற்போது கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்தப் பகுதியில் புதியதாக டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இனி உள்ளூர் சுற்றுலா பயணிகள் ரூ. 40ம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரூ. 600ம் செலுத்தினால் மட்டுமே வெண்ணை உருண்டை பாறையை பார்வையிட முடியும் என்று தொல்லியல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாறையையொட்டி அமைக்கப்பட்டுள்ள கட்டண கவுண்டர்

மேலும், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை நுழைவாயிலிருந்து பேருந்து நிலையம் செல்ல 10 ரூபாய் கட்டணத்தில் 5க்கும் மேற்பட்ட மினி பேருந்து சேவையும் இயக்கப்படுகின்றது. இதற்கு முன்னரே மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற்றை பார்வையிட ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய மினி பேருந்து சேவை

இதையும் படிங்க: மாமல்லபுரம் விசிட் ஹைலைட்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details