தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விரைவில் மதுரையில் கலைஞர் நூலகம் திறப்பு - புத்தகக் காட்சி தொடக்கவிழாவில் முதலமைச்சர் பேச்சு - Library to be opened soon informed

46-வது சென்னை புத்தகக் காட்சி-2023 கண்காட்சியை (Chennai Literary Festival 2023) தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரையில் கலைஞர் கருணாநிதி பெயரால் ரூ.114 கோடி மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன என்றார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 6, 2023, 9:50 PM IST

விரைவில் மதுரையில் கலைஞர் நூலகம் திறப்பு - புத்தகக் காட்சி தொடக்கவிழாவில் முதலமைச்சர் பேச்சு

சென்னை:தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 46-வது சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை (Chennai Literary Festival 2023) சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.6) தொடங்கி வைத்தார்.

பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "நான் பேரூரையோ, சிறப்புரையோ ஆற்ற வரவில்லை, சுருக்க உரை ஆற்ற வந்திருக்கிறேன். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெறக்கூடிய 46-ஆவது புத்தகக் காட்சியை தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒருகாலத்தில் சென்னையில் மட்டுமே புத்தகக் கண்காட்சி நடந்து வந்தது. அதைத் தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் நடக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. புத்தக வாசிப்பில் ஆர்வம் இருக்கக்கூடிய ஆட்சித் தலைவர்கள், அந்த ஆட்சியர்கள் அவரவர் மாவட்டத்திலே அதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். அந்த புத்தகக் கண்காட்சியை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் இந்த புத்தகக் காட்சிகள் நடத்துவதற்கு நம்முடைய அரசு ஆணையிட்டது. அதற்காக 5 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடும் செய்திருக்கிறோம்.

ரூ.50 லட்சத்திற்கு புத்தகக் கண்காட்சி: அதன் விளைவாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன. வழக்கமாக, சென்னைப் புத்தகக் காட்சிக்காக அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று நோய் வந்த காரணத்தால், பதிப்பாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சூழலை மனதில் கொண்டு பபாசி அமைப்பினர் கூடுதல் நிதியை அரசிடம் கேட்டார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உடனடியாக அதை ஏற்று 50 லட்சம் ரூபாயை அன்றைக்கு அரசின் சார்பில் நாம் வழங்கினோம்.

'வீட்டுக்கு ஒரு நூல் நிலையம் அமைய வேண்டும்' என்று ஆசைப்பட்டவர், அறிஞர் அண்ணா. தமிழின் மீதும் புத்தகங்களின் மீதும், எழுத்தின் மீதும், எழுத்தாளர்கள் மீதும் மாறாக் காதல் கொண்டவர், நம்முடைய கலைஞர் கருணாநிதி. மொழியியல் அறிஞர் பா.ரா.சுப்பிரமணியன், கவிஞர் தேவதேவன், மொழிபெயர்ப்பாளர் சி.மோகன், நாடகக் கலைஞர் பிரளயன், நாவலாசிரியர் தேவிபாரதி, சிறுகதையாசிரியர் சந்திரா தங்கராஜ் ஆகியோரை நான் மனதார பாராட்டுகிறேன். அவர்களுக்கெல்லாம் என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் 'கலைஞர் பொற்கிழி விருதுகள் 2023' மற்றும் 'பபாசி விருது'களை வழங்கிய முதலமைச்சர்

விரைவில் கருணாநிதி நூலகம்: 2008ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரக்கூடிய இந்த விருதைப் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வரை 100 பேர் என்ற எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. மதுரையில் கலைஞர் கருணாநிதி பெயரால் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் (Kalaignar Memorial Library Madurai) அமைக்க இன்றைய அரசு திட்டமிட்டு பிரமாண்டமாக எழுந்து வருகிறது. விரைவில் அது திறக்கப்படவிருக்கிறது என்ற அந்த மகிழ்ச்சியான செய்தியை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 173 நூல்களை கடந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் அரசின் சார்பில் வெளியிட்டிருக்கிறோம்" எனக் கூறினார்.

மேலும், முத்தமிழறிஞர் 'கலைஞர் பொற்கிழி விருதுகள் 2023' மற்றும் 'பபாசி விருது'களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த புத்தகக் கண்காட்சி இன்று ஜன.6 முதல் தொடங்கி ஜன.22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியைப் பொது மக்கள் பார்வையிடலாம். இந்த ஆண்டு கூடுதலாக 200 அரங்குகளுடன் மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அதில், சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்கு ஒன்று பிரத்யேகமாக அமைக்கப்பட இருக்கிறது' என்றார்.

இதையும் படிங்க: 'திமுகவின் ஆட்சிக்காலம் எப்போதும் தமிழாட்சி காலம்' - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

ABOUT THE AUTHOR

...view details