தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில், மதுரையில் சித்திரைத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இந்த திருவிழாவில் கூடும் போது, தேர்தல் நடத்துவது வாக்குப்பதிவை பாதிக்கும் என்று கூறப்பட்டது.
மதுரையில் தேர்தலை ஒத்திவைக்க கோரிய மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை: மதுரையில் சித்திரைத் திருவிழா நடக்கும் நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்ததால், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள்மீதான விசாரணையில், திருவிழாவை தள்ளி வைக்க முடியாது என்று கோவில் நிர்வாகமும், தேர்தலை தள்ளிவைக்க முடியாது என்று தேர்தல் ஆணையமும் பதில் மனுக்கள் தாக்கல் செய்தது.
மதுரை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்நிலையில், தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய 3 மனுக்களையும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.