சென்னை பல்கலைக்கழகம் அமைந்துள்ள சேப்பாக்கம் பல்கலைக்கழக வளாகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய மக்கள் தொகை பதிவேடு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜமியா அலியா பல்கலைக்கழக மாணவர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மத்திய அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் தாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.