தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம்: வைரல் வீடியோவுக்கு மறுப்பு தெரிவித்த சென்னை பல்கலைகழகம்! - குடியரசுத் தலைவர்

சென்னை பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் குடியரசுத் தலைவர் வருகைக்காக கழிவு நீர் வாய்க்கால்கள் மனிதர்களை பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய வீடியோ குறித்து சென்னை பலகலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம்: சென்னை பல்கலைகழகம் மறுப்பு! சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு!
மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம்: சென்னை பல்கலைகழகம் மறுப்பு! சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு!

By

Published : Aug 5, 2023, 8:41 PM IST

Updated : Aug 7, 2023, 1:45 PM IST

மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம்: சென்னை பல்கலைகழகம் மறுப்பு! சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு!

சென்னைபல்கலைக்கழகத்தின் கீழ் 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்த மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கடந்த கல்வியாண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்குவதற்கான சென்னை பல்கலை யின் 165 வது பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 6) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் கலை அரங்கில் நடைபெறுகிறது.

இந்தியாவின் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை ஏற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

இதன் இடையில் சென்னை பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் குடியரசுத் தலைவர் வருகைக்காக கழிவு நீர் வாய்க்கால்கள் மனிதர்களை பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. இந்த சம்பவத்திற்கு பல தரப்பினர் இடைய எதிர்ப்புகள் வந்த நிலையில் அதற்கு சென்னை பலகலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்," சென்னை பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர உத்தரவாத சான்றிதழ் ( நாக்) பெறுவதற்கான மதிப்பெண் குழுவின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கூறப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென மெரினா கல்லூரி வளாக இயக்குனருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

மனிதர்களைக் கொண்டு கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்யக் கூடாது என்ற விதிமுறையை மீறி வளாக இயக்குனர் சுத்தம் செய்துள்ள தகவல் வீடியோ வெளியான பின்னர் தான் தெரியவந்தது. இந்த விதிமுறையை மீறி செயல்பட்ட வளாக இயக்குனரிடம் விசாரனை நடத்திய பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். குடியரசுத் தலைவர் வருகைக்கும் மெரினா வளாகம் சுத்தம் செய்யப்பட்டதற்கு எந்த வித தொடர்பும் இல்லை”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேனி அருகே காரில் கடத்திய உடல் உறுப்புகள்-நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை!

Last Updated : Aug 7, 2023, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details