சென்னை: சென்னை ஐஐடியில் கரோனா பெருந்தொற்று பரவல் கட்டுப்பாடுகளுக்கு பின்னர் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இரு மாதங்களில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மாணவர்கள் தற்கொலை தடுப்பதற்கும் ஐஐடி(Madras IIT) நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி சென்னை ஐஐடியில் படித்து வரும் ஆராய்ச்சி மாணவர் சச்சின் ஜெயின் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி திலகவதி தலைமையில் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் சபிதா, கண்ணகி பாக்கியநாதன், சென்னை ஐஐடியின் பேராசிரியர் ரவீந்திர ஜுட்டு, ஆர்எச் மாணவர் அமல் மனோகரன் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஐஐடி நிர்வாகம் இந்த குழுவை அறிவித்துள்ளது.