சென்னை:தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களிடம் காவல் துறையினர், எந்த குற்றத்திலும் ஈடுபட மாட்டோம் என நன்னடத்தை பிரமாணம் பெறுவது வழக்கம். இந்த நன்னடத்தை பிரமாணத்தை மீறுவோரைச் சிறையில் அடைக்கக் காவல் துறை துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.
இதன் அடிப்படையில் நன்னடத்தை பிரமாணத்தை மீறியதாகச் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் இரு வேறு நீதிபதிகள் இரு வேறு விதமாகத் தீர்ப்பளித்தனர். எனவே இது சம்பந்தமான சட்டக் கேள்விக்கு விடை காண நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.