சென்னை: தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "இந்திய தேர்தல் ஆணையர் 2021ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது. திமுக மற்றும் அதிமுக சார்பில், அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்டனர். மாற்று கட்சி வேட்பாளர் படிவம் B-இன் படி அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தில் போட்டியிட தேர்தல் நடத்தும் அதிகாரி அனுமதி வழங்குகிறார்.
கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் உறுப்பினராக ஏற்றுக் கொள்வதாக படிவம் B தெரிவிக்கிறது. ஆனால், மக்கள் பிரிதிநிதித்துவச் சட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியில் உறுப்பினராக இருப்பவர், மற்றொறு கட்சியில் உறுப்பினராக இல்லை என உறுதியளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிரந்தர சின்னங்களை, வேறு யாருக்கும் ஒதுக்குவது கிடையாது.
பதிவு செய்யப்பட்ட மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு வேறு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்படுகிறது. இதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னத்தில் போட்டியிடுவதற்கு எதிராகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.