தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண் குவாரி முறைகேடு வழக்கு: பொன்முடி மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் - செம்மண்

சட்டவிரோதமாக செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதில் உடந்தையாக இருந்ததாக பதிவான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

sand quarry  sand quarry scam  minister Ponmudy  madras high court  chennai news  chennai latest news  sand quarry scam charges on minister Ponmudy  Ponmudy  மண் குவாரி முறைகேடு வழக்கு  மண் குவாரி  மண் குவாரி முறைகேடு  பொன்முடி  உயர்நீதிமன்றம்  சென்னை உயர்நீதிமன்றம்  செம்மண்  சென்னை செய்திகள்
பொன்முடி

By

Published : Nov 12, 2022, 12:50 PM IST

சென்னை:கடந்த 2006-11ஆம் ஆண்டு காலத்தில் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 600 ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை விடுவிக்கக் கோரி பொன்முடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கில் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்து மனுதாரருக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்த போதுமான ஆதாரங்கள் உள்ளதாக கூறி, அமைச்சர் பொன்முடியை விடுவிக்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் வழக்கு; குற்றச்சாட்டு பதிவு செய்ய அனுமதி கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details