தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதிவு செய்த வழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - ADMK

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

jayakumar case
jayakumar case

By

Published : Jun 28, 2022, 7:43 PM IST

Updated : Jun 28, 2022, 8:48 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுகவினர் சிலர் அத்துமீறி வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட முயன்றதாக காவல் துறையிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டார்.

144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது, தொற்று நோய் தடுப்புச்சட்டத்தின் கீழ் நோய் பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ராயபுரம் காவல் நிலைய காவல் துறையினர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் விதமாக ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், “திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றனர்.

அதனை தட்டிக் கேட்டபோது தாக்குதல் மற்றும் கல்லெறி சம்பவங்களில் திமுகவினர் ஈடுபட்டனர். இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், காவல் துறையினர் திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், எங்கள் மீது வழக்குப்பதிவு செய்ததால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று (ஜூன் 28) நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ராயபுரம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த ஓபிஎஸ் தரப்பு

Last Updated : Jun 28, 2022, 8:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details