சென்னை:திருநெல்வேலி, கூடத்தலை, தோமையார்புரம், கூட்டப்புளி கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியான கடலோர அரிப்பினால் மீனவர்களுக்குச் சொந்தமான பல வீடுகள், படகுகள் மற்றும் கடற்பரப்புகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. ஆகையால் பசுமை காலநிலை நிதியின் கீழ் தூண்டில் வளைவு அமைக்க 36 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், கடலோர பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது எனக் கூறியும், தூண்டில் வளைவு அமைக்க தடை விதித்தும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு மீனவ நலச்சங்கத்தின் தலைவர் பீட்டர் ராயன் தாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “கடல் அரிப்பை தடுக்க, தமிழ்நாடு கடலோர பகுதிகளில் செயற்கை பாறை அமைக்க தமிழக செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, “இது சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் மாதம் தள்ளிவைத்தது” நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை மோதுமா ‘மோக்கா’ புயல்? - சென்னை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்