சென்னை:பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட வேண்டும் (covid-19 vaccination) எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்தநிலையில்,தற்போது தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள், குறிப்பிட்ட வயதைக் கடந்த மாணவர்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட வேண்டும் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தக் கூடாது
இந்த சுற்றறிக்கையை எதிர்த்து அறம் என்ற அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு நேற்று (நவம்பர் 22) விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், "தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்தாத நிலையிலும், சிலர் இயற்கை மருத்துவத்தை நாடும் நிலையிலும் தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தக் கூடாது" என வாதிடப்பட்டது.