தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துப்பாக்கி சூடு விவகாரம்.. திமுக முன்னாள் எம்எல்ஏ இதயவர்மனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்றம் உத்தரவு - இதயவர்மன்

திருப்போரூர் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ இதயவர்மனுக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக முன்னாள் எம்எல்ஏ இதயவர்மனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
திமுக முன்னாள் எம்எல்ஏ இதயவர்மனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

By

Published : Mar 5, 2022, 5:02 PM IST

Updated : Mar 5, 2022, 5:23 PM IST

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகாவில் செங்காடு மற்றும் இள்ளளூர் கிராமத்தில் உள்ள நில விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் எம்எல்ஏ இதயவர்மனுக்கும், குமார் என்பவருக்கும் இடையில் பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நில விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக இதயவர்மன் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், 2019 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட போது இதயவர்மனுக்கு பணம் கொடுக்காததால் கோயில் நிலத்தை ஆக்கிரமிக்கவுள்ளதாக பொதுமக்களிடையே அவதூறு பரப்பி, தனது நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்த இதயவர்மன் ஆட்கள் நிலத்தை சேதப்படுத்தியதாகத் தொடர்பாக குமார் என்பவர் புகார் அளித்தார்.

திருப்போரூர் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான நில விவகாரம்

இந்த புகார் குறித்து விசாரிக்க, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு, திருப்போரூர் தாசில்தாரர் பரிந்துரைத்ததை எதிர்த்து குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், "திருப்போரூர் வட்டாட்சியர் விசாரணையில் சம்மந்தப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு அல்ல. கோயிலுக்கு சொந்தமான நிலமும் அல்ல என தெரிய வந்தும், இதயவர்மனின் அரசியல் செல்வாக்கால் செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்குருக்கு பரிந்துரைத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதுவரை இதயவர்மனோ? அவரது ஆட்களோ? தன்னுடைய நிலத்திற்குச் சென்று வரவோ? இடையூறு ஏற்படுத்தவோ? கூடாது என உத்தரவிடுமாறு குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்த வட்டாட்சியரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும் இந்த நில விவகாரத்தில் தலையிடக் கூடாது என அப்போதைய திமுக எம்எல்ஏ இதயவர்மன் தரப்பினருக்கும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று (மார்ச்.5) நீதிபதி தண்டபாணி முன்பு பெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இது உரிமையியல் வழக்கு என்பதால் முதலில் உரிமையியல் நீதிமன்றத்தைத் தான் அணுக முடியும் என்றும் அதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மீட்புப்பணிக்காக போரை நிறுத்திய ரஷ்யா

Last Updated : Mar 5, 2022, 5:23 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details