கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய திமுக சட்டப்பேரவைஉறுப்பினர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயராக இருந்தபோது, முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சானவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்.
என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நில அபகரிப்பு தொடர்பாக மா.சுப்பிரமணியன் மீது சி.பி.சி.ஐ.டி காவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து போலி ஆவணம் தயாரித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்த சி.பி.சி.ஐ.டி இதுநாள் வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி மனுதாரர் பார்த்திபன் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.,ரமேஷ், மா.சுப்ரமணியன் மீதான நில அபகரிப்பு புகார் குறித்த விசாரணையை துரிதப்படுத்தி,குற்றப்பத்திரிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.