சென்னை:கரோனா தொற்று மூன்றாவது அலை பரவல் காரணமாக கல்லூரி பருவத்தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும், இறுதிப் பருவத்தேர்வுகள் நேரடியாக ஜூன் - ஜூலை மாதங்களில் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு உயர் கல்வித் துறை கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன், கல்வி நிறுவனங்களின் நம்பகத்தன்மையும் பாதிக்கப்படும் எனக் கூறி, ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த தடைவிதிக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.