சென்னை: கோவை மாவட்ட பாஜக தலைவராக உள்ள பாலாஜி உத்தம ராமசாமி, கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி, இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசி, அதை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி பாலாஜி உத்தம ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், “உதயநிதி ஸ்டாலின் குறித்து உள்நோக்கத்துடனோ, அவதூறாகவோ தான் பேசவில்லை என கூறியுள்ளார். மேலும், என்ன நடந்தது என்பதை காவல் துறை முறையாக விசாரிக்காமல், அரசியல் உள்நோக்கத்தோடு தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.