சென்னை:சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் அரசுக்கு சொந்தமான 43 கிரவுண்ட் நிலம் கடந்த 1923ஆம் ஆண்டு கோபால நாயக்கர் சன்ஸ் என்ற நிறுவனத்திற்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. அந்த நிலம் குத்தகைக்கு விடப்பட்டு 100 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு, குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை மீட்கும் முயற்சியை மேற்கொண்டது, தமிழக அரசு.
இதையும் படிங்க:பாம்பு கடித்து இருவர் உயிரிழப்பு - சாலை அமைக்கும் பணியைத் துரிதப்படுத்த 8 கிமீ நடந்து சென்ற கலெக்டர்!
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மனுதாரர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 43 கிரவுண்ட் நிலத்தில் 25 ஏக்கர் நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனவும்; அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி அதற்கான இழப்பீட்டையும் தங்களுக்கு அளித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 100 ஆண்டுகளாக நிலத்தின் உரிமையை தாங்கள் அனுபவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரிய அளவிலான அரசின் நிலத்தை குத்தகைக்கு விடும் போது, அதன் வாடகை முறையாக வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.