சென்னை:சந்திரயான்-3 மற்றும் லூனா-25 இரண்டும் விண்கலங்களும் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளna. இதில் முதலில் தன் இலக்கை அடையப்போவது யார் என்பது நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
பூமியின் துணைக் கோளாய் இருக்கும் நிலவை, உலகத்தின் பல்வேறு நாடுகள் கடந்த 1958ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் நிலவை குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றன. இதில் உலக புகழ்பெற்ற நாசா கடந்த 64 ஆண்டுகளில் மேற்கொண்டு உள்ள நிலவு தொடர்பான ஆராய்ச்சி திட்டங்களில் 40 சதவீதம் தோல்வியைத் தான் சந்தித்து உள்ளது. உலகின் முதல் முறையாக அமெரிக்கா தான் நிலவு ஆராய்ச்சித் திட்டத்தை நடத்த முயற்சி செய்தது.
கடந்த 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடத்திய திட்டத்தில் அமெரிக்கா முதல் தோல்வியை சந்தித்தது. 1959ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி லூனா 1 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் செலுத்தியது ரஷ்யா. உலகில் முதல் நாடு என்ற பெருமையையும் ரஷ்யா படைத்தது. இதனைத் தொடர்ந்து அப்போலோ 11 திட்டத்தின் மூலம் மனிதன், முதன் முதலாக நிலவில் காலடி எடுத்து வைத்தான். நீல் ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் நிலவில் தரையிறங்கினர். அதன்பிறகு 12 மனிதர்கள் நிலவிற்கு சென்று உள்ளனர். டிசம்பர் மாதம், 19, 1972 ஆண்டு தான் இறுதியாக நிலவுக்கு மனிதன் சென்றான்.அதைத் தொடர்ந்து, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், சீனா, இந்தியா , இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள், சந்திரன் குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக களம் இறங்கின.
சந்திராயன் 3 :நிலவை ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடு என்ற மிகப்பெரிய பெருமையை 'இந்தியா' பெற உள்ளது. இதற்காக நமது நாடு ரூ.615 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் நவீன முறையில் வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் 2023ஆம் ஆண்டு ஜூலை14அன்று சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்து சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணிக்க துவங்கியது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. நள்ளிரவு (ஆகஸ்ட் 1ஆம் தேதி) 12.05 முதல் நிலவின் வட்டப் பாதைக்குள் பயணிக்க துவங்கியது. நிலவை நோக்கி அதன் பயணம் தொடங்கி உள்ளது. இதன்பிறகு திட்டமிட்டபடி இம்மாதம் ஆகஸ்ட் 23-ம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக (Soft Landing) தரையிறக்கப்பட உள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா: நிலவில் இருக்கும் நீர் ஆதாரம் மற்றும், அங்கு இருக்கும் கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக லூனா 25 செயற்கைக்கோளை விண்ணிற்கு, ரஷ்யா அனுப்பியுள்ளது. அந்த நாட்டின் தலைநகரமான மாஸ்கோவிற்கு கிழக்கே 35,550 கிமீ தொலைவில் அமைந்துள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து "சோயுஸ் 2.1 வி "(Soyuz 2.1v)" ராக்கெட்டில் லூனா-25 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ரஷ்யா ஏவி உள்ளது. கடந்த 1976 ஆம் ஆண்டு ரஷ்யா, நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லூனா 24 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதற்கு பின் 47 ஆண்டுகள் கடந்து லூனா-25 ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.
லூனா-25, ஒரு சிறிய காரின் அளவில் தான் இருக்கும். நிலவின், தென் துருவத்தில் ஒரு வருடம் காலம் வரை லுனா 25 செயல்பட உள்ளது. லூனா 25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. நிலவின் நீள்வட்டப்பாதையில் சுற்றும் லூனா 25 படிப்படியாக அதன் சுற்றுப்பாதை தூரத்தை குறைத்துக் கொண்டே வருகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 23ஆம் தேதிக்குள் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்வெளி சவால்கள்:பூமியில் இருந்து நிலவுக்கு அனுப்பப்படு விண்கலங்கள் பல்வேறு, சவால்களை சந்திக்கின்றன. பூமியைப்போல் அங்கு தட்பவெப்ப நிலை என்பது சீராக இருக்காது. விண்வெளிக்கு என்று தனி வெப்பம், மேலும், அதற்கு தனியாக கோட்பாடே உள்ளது. அதேபோல்,நிலவு பூமியில் இருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பூமியை சுற்றி வருகிறது. அங்கு ஈர்ப்பு விசை மிக மிக குறைவு. காற்று மண்டலம் கிடையாது. தரையிறங்க பாராசூட்டுகளை பயன்படுத்த முடியாது. எனவே, நிலவில் தரையிறங்குவது, ஆய்வு ஊர்தி கொண்டு ஆய்வு மேற்கோள்வது மிகவும் கடினமானவை. பூமி தொடர்ந்து சுற்றி கொண்டு இருக்கிறது. நிலவும், ஒரு இடத்தில் இருக்காது, அதை கணக்கீடு செய்து விடுவதில், பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.