சென்னை: வட இந்திய மொழியில் திங்கள் கிழமை சோமவாரம் என்றழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கள் கிழமை சிவனுக்குரிய நாளாக பூசை செய்யப்படுகிறது. 16 திங்கல் கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து வழிபடுவது “16 சோமவார விரதம்” என அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.
இதுபோன்று சோமவார விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து 16 திங்கள் கிழமைகள் விரதம் இருப்பதே இதன் முக்கிய சிறப்பாகும். பக்தர்கள் அதிகாலை எழுந்து சிவனுக்கு மலர்களை சூட்டி, பொங்கல், பாயாசம் போன்ற உணவுகளை சிவனுக்கு படைக்க வேண்டும். பின்னர் சிவ மந்திரங்களை படித்து பூசிக்க வேண்டும்.