தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹரிஷ் கல்யாணின் படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்! - Lokesh Kanagaraj appreciated parking movie

Lokesh Kanagaraj appreciated Harish Kalyan's Parking movie : படத்தின் ஒன்லைனும் சுவாரஸ்யமாக உள்ளதாக ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தைப் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

ஹரிஷ் கல்யாணின் படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!
ஹரிஷ் கல்யாணின் படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 1:59 PM IST

சென்னை:பாக்ஸ் ஆஃபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநரான லோகேஷ் கனகராஜ், நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தைப் பாராட்டி உள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படும் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. கிரிக்கெட் வீரர் தோனி தயாரித்த எல்ஜிஎம் படத்திலும் இவர் நடித்து இருந்தார்.

தற்போது பேஷன் ஸ்டுடியோசின் சுதன், சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ். சினிஷ் இணைந்து தயாரித்து உள்ள ’பார்க்கிங்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். நடிகர் ஹரிஷ் கல்யாண் கமர்ஷியல் மற்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்களாக தேர்வு செய்து தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார்.

அவரது ‘பார்க்கிங்’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தினை ராம்குமார், பாலகிருஷ்ணன் இயக்கி உள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 1 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க: “இவனுக்கு முன்னாடி நான் ஒன்னுமே இல்லை” - மிஷ்கினை புகழ்ந்த பாலா!

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இப்படம் வெற்றிப் பெற தனது வாழ்த்துக்களை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "பார்க்கிங் படம் பற்றி நிறைய நேர்மறையான விஷயங்களை கேள்விப்படுகிறேன். மேலும், படத்தின் ஒன்லைனும் சுவாரஸ்யமாக உள்ளது.

சினிஷ், சுதன் சுந்தரம், ராம்குமார் பாலகிருஷ்ணன், ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எனது சகோதரர்களான சாம் சிஎஸ் மற்றும் எடிட்டர் பிலோமின் ஆகியோருக்கு சிறப்பு வாழ்த்துகள்" எனக் கூறியுள்ளார்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார், மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யூடியூப்பில் அதிக நெகட்டிவிட்டி பரப்பப்படுகிறது - நடிகர் விக்ரம் பிரபு கருத்து

ABOUT THE AUTHOR

...view details