ஆவடியை அடுத்த அயப்பாக்கம், கணேஷ் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (43). இவர், பழைய இரும்புக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி பவுன்மணி (37).
கடந்த 14ஆம் தேதி காலை, மகேந்திரன் தனது மனைவி பவுன்மணியுடன் வீட்டை பூட்டி விட்டு கடைக்குச் சென்றுள்ளார். தொடர்ந்து இத்தம்பதியினர் வியாபாரம் முடிந்து இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகளும், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் கொள்ளை போனது தெரியவந்தது.
இது குறித்து மகேந்திரன் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் முன்னதாக புகார் அளித்த நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜூன்.23) ஆவடியை அடுத்த வீராபுரம், ஜெ.ஜெ.நகரை சேர்ந்த விக்கி (19) என்னும் நபர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது சிசி டிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இளைஞநரிடமிருந்து 12 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொன்னேரி கிளை சிறையில் அவரை அடைத்தனர்.
இதையும் படிங்க: லாரி டிரைவரை சரமாரியாக தாக்கி செல்போன், பணம் பறிப்பு!