தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்து இயங்குமா? - முதலமைச்சர் ஆலோசனை - Lockdown

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் முதல் முழு ஊரடங்கை நீட்டிக்கலாமா, பொதுப்போக்குவரத்தை இயக்கலாமா? என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

TN CM
TN CM

By

Published : Aug 30, 2020, 3:00 AM IST

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெனீவா- உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி, ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானி,‌ சென்னை தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநர், உலக சுகாதார அமைப்பின் முதுநிலை மண்டலக் குழுத் தலைவர், மருத்துவ வல்லுநர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

பொதுப் போக்குவரத்து தொடர்பாகவும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்தும், சினிமா திரையரங்கு, பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை திறப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்தும் நேற்றைய தினத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details