தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு முழு விவரம்!

தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

lockdown extension
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு

By

Published : Jul 10, 2021, 2:13 PM IST

Updated : Jul 11, 2021, 2:24 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது.

எனினும், மாநிலத்தின் கரோனா தொற்று நிலையைக் கண்காணித்து, அதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

இரவு நேர ஊரடங்கு

ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள், செயல்பாடுகள் வரும் 12ஆம் தேதி முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

எவைகளுக்கு அனுமதி

  1. புதுச்சேரிக்கு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது.
  2. ஒன்றிய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இது குறித்த விபரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.
  3. உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள் (Bakery), நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குள்பட்டு 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

அனைத்து கடைகள், பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

வழிகாட்டல்கள்

  • கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (சானிடைசர்) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
  • குளிர்சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
  • கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

கரோனாவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

  • நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இங்கு மருத்துவ அவசர சேவைகள், அத்தியாவசிய பொருள்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.
  • நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், நோய்த் தொற்று பரவலை கண்காணிக்க, குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.
  • அனுமதிக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தொடர்புடைய துறைகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
  • கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு

Last Updated : Jul 11, 2021, 2:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details