இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த 370 சட்டத்தை ரத்து செய்வோம் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். அது அவர்களுடைய கொள்கை. ஆனால் பெரு நாடு இன்னொரு நாட்டோடு செய்து கொள்ளும் ஒப்பந்தம், அதை காப்பாற்ற வேண்டும். அப்படி இல்லையென்றால் நாட்டின் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகிவிடும். இதை நடைமுறைப்படுத்த துணிந்துவிட்ட மத்திய அரசு, நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் எந்த அறிவிப்பும் செய்யாமல் முதலில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை காஷ்மீரில் குவித்து, பின்னர் இந்த சட்டத்தை ரத்து செய்துள்ளார்கள். இது போன்று, ராணுவத்தினரை குவித்து சட்டம் இயற்றுவது ஜனநாயக நாட்டில் நடைபெறாது, மாறாக சர்வாதிகார நாட்டில்தான் நடைபெறும். இதன்மூலம் ஜனநாயகத்தின் மீது கடுகளவும், நம்பிக்கை இல்லாத கட்சி என்று பாஜக நிரூபித்துள்ளது.
எடப்பாடி இருக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது: முத்தரசன்! - உள்ளாட்சி தேர்தல்
சென்னை: தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று இந்தய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
அதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு ஆட்சியிலிருக்கும்வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று யாரும் நம்ப வேண்டாம். தேர்தல் நடந்தால் தோற்று போய்விடுவோம் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். நேற்று வேலூர் தொகுதி தேர்தலின் முடிவுகள் வெளியாகின. இந்த தேர்தலுக்காக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் என்று எல்லோரும் அங்கு சென்று முற்றுகையிட்டு வேலை செய்தார்கள். கோடி கணக்கில் பணம் செலவு செய்தார்கள். அதிகாரத்தை எவ்வளவு கேவலமாக உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலமாக பயன்படுத்தினார்கள். ஆனால் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலை முதலமைச்சர் நடத்த விடமாட்டார்" என்றார்.