ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, "மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. 100 சதவீதம் எவ்வித முறைகேடுமின்றி நேர்மையாக நடத்தப்பட்ட இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 77.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல்! - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி
சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
election-commissioner
வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது என்பது ஏற்கமுடியாது. தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைவரும் வரும் 6ஆம் தேதி காலை பதவி ஏற்கவுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றது" என்றார்.
இதையும் படிங்க: ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!
Last Updated : Jan 4, 2020, 1:10 PM IST